இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கொரோனா
1 min read
All over India corona affected by 14.933 one day
23-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவல் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவில் நேற்று( திங்கட்கிழமை) மட்டும் 14933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவுக்கு 213 பேர் இறந்ததுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14011 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 248190 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 178014 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில்தான் 135796 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 2 -வது இடத்தில் டெல்லி உள்ளது. அந்த மாநிலத்தில் 62655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 62087 பேருக்கும், குஜராத்தில் 27825 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12078 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக…
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,35,796 ( 6,283)
டெல்லி – 62,655 ( 2,233)
தமிழ்நாடு -62,087 (794)
குஜராத்- 27,825 (1,684)
உத்தரபிரதேசம்,-17,322 (569)
ராஜஸ்தான்-15,232 (356)
மேற்கு வங்காளம்- 14,358 (569)
மத்திய பிரதேசம்-12,078 (521)
அரியானா-11,025 (169)
கர்நாடகம்-9,399 (142)
ஆந்திரா 9,372 (111)
தெலுங்கானா-8,674 (217)
பீகார்-7,825 (55)
காஷ்மீர்-6,088 (85)
அசாம்-5,586 (9)
ஒடிசா-5,303 (15)
பஞ்சாப் 4,235 (101)
கேரளா-3,310 (21)
உத்தரகாண்ட்-2,402 (28)
சத்தீஸ்கர்-2,303 (12)
ஜார்க்கண்ட்-2,137 (11)
திரிபுரா-1,237 (1)
மணிப்பூர்-89 (0)
கோவா-764 (1)
லடாக்-847 (1)
இமாச்சல பிரதேசம்-727(8)
சண்டிகர்-411(6)
புதுச்சேரி-383(8)
நாகலாந்து-280(0)
மிசோரம்-141(0)
அருணாச்சல பிரதேசம் – 139(0)