கைதிகளை விசாரிக்கும்போது எச்சரிக்கை தேவை; போலீசாருக்கு டி.ஜி.பி. அறிவுரை
1 min read
DGP to police Advice
25-6-2020
போலீஸ் காவலில் உள்ள கைதிகளை விசாரிக்கும்போது எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
தந்தை-மகன் சாவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பஸ் நிலையம் அருகே கடை வைத்திருந்த தந்தையையும் மகனையும் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்தனர்.
அவர்கள் இருவரும் போலீசார் அடித்ததால்தான் இறந்தனர் என்று அவர்களது குடும்பத்தினர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கடையடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது.
இதன் பிரதிப்பாகவும், கொரோனா பரவி வரும் நிலையிலும், தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.
எச்சரிக்கை
அதில், விசாரணைக் காவலில் கைதிகளை விசாரிக்கும்போது காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரின் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனி கட்டிடம் ஏற்படுத்தவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.