கொரோனாவுக்கான தடுப்பூசி சோதனையில் நல்ல முடிவு தாய்லாந்தில்
1 min read
Good results on vaccination tests for coronavirus In Thailand
25-6-2020
கொரோனாவுக்கான தடுப்பூசி சோதனையில் நல்ல முடிவு ஏற்பட்டதாக தாய்லாந்து தெரிவித்து உள்ளது.
தடுப்பூசி
உலகில் எங்கு பார்த்தாலும் கொரோனா கொரோனா… என்பதே பேச்சாக உள்ளது. யாரைப்பார்த்தாலும் “என்ன உங்க ஏரியால கொரோனா எப்படி இருக்கு “என்ற கேள்வியுடன்தான் நல விசாரிப்பு தொடர்கிறது.
ஆம் அந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.
சீனாவில் தோன்றி உலக நாடுகளை திக்குமுக்காட செய்துள்ள கொரோனா வைஸ் உலகத்தைத்தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஆனால் கொரோனாவுக்கு இன்னும் ஆதிகாரப்பூர்வமாக மருந்து கண்டறியப்படவில்லை. மருந்தும் தடுப்பூசியும் கண்டறியப்பட்டால்தான் கொரோனாவை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.
பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகள் மருந்து கண்டு பிடித்தாலும் அதை பரிசோதித்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தாய்லாந்து
இந்த நிலையில் தாய்லாந்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது.
இந்த தடுப்பூசி முதல்கட்டமாக குரங்குகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து 2-வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த சோதனையில் வெற்றி பெற்றால் அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ம் தாய்லாந்து நாட்டு அறிவியல் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.