டூ பீஸில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிவேதா தாமஸ்
1 min read
நிவேதா தாமஸ்
தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த போராளி படத்தின் மூலம் நாயகியாக களம் இறங்கியவர் நிவேதா தாமஸ்.
பின்னர் தமிழ், மலையாளம் என கலக்கிக் கொண்டிருந்த நாயகியை தெலுங்கு பக்கம் இழுத்துச் சென்றார் பிரபல நடிகர் நானி. அந்த படம் ஹிட் அடிக்க தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிந்த நிலையில் தெலுங்கிலேயே தங்கி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் நடித்த பாபநாசம் என்ற சூப்பர்ஹிட் படத்திலும், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திலும் மகளாக நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பட வாய்ப்பு இல்லை என்றால் நடிகைகள் கவர்ச்சியில் இறங்கும் போது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ஆனால் கை நிறைய படவாய்ப்புகள் இருக்கும்போதே நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.
இதுவரை படங்களில் இடுப்பை கூட காட்ட தயங்கிய நிவேதா தாமஸ் டூ பீஸில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதை நிவேதா தாமஸ் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எது எப்படியோ, நிவேதா தாமசை நீச்சல் உடையில் தரிசிக்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.