கவர்ச்சி படங்களுக்கு கிடைத்த வாய்ப்பு -குஷியில் நடிகை
1 min read
17.7.2020
Opportunity for glamor photos – Actress in delightமுன்னணி நடிகர்களின் படங்களில் அவர்கள் பேமஸ் ஆகிறார்களோ இல்லையோ அவர் கூட நடித்த குழந்தை நட்சத்திரங்கள் படுபேமஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் தல அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா.
அதைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் தல அஜித் மகளாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
சில தல ரசிகர்களும் தல அஜீத்துடன் நடித்து விட்டு இந்த மாதிரி செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியும் வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் பெரும்பாலும் பிற்காலங்களில் கதாநாயகிகளாக வலம் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பட வாய்ப்புக்கு அடி போட்ட அனிகாவுக்கு தற்போது ஹீரோயினாக சான்ஸ் கிடைத்துள்ளதாம். மலையாளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி காதல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் கதையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதற்கு கைமேல் பலன் கிடைத்து விட்டதாக சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம் நாயகி. மேலும் சில வெப்சீரிஸ் மற்றும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.