கோவை கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா
1 min read
15.7.2020
Corona to Coimbatore Collector Rajamaniகோவை: கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கே ராஜாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகி உள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) இல் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் கே ராஜாமணி. இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் மற்றும் சிறப்பு அலுவலராக பணியாற்றி உள்ளார். இதேபோல் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு பின் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. ஆனால் ஜூலையில் இந்த வேகம் கடுமையாக அதிகரித்தது. சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கோவையில் கொரோனா கடுமையாக அதிகரித்தது.
இந்நிலையில் முன்கள வீரராக கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணியே களத்தில் இறங்கி கொரோனா தடுப்பு பணியாற்றினார். கொரோனா பாதித்த பல இடங்களுக்கு சென்று பணிகளை செய்து வந்தார். இதனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. இதில் கலெடர் ராஜாமணிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தானே கலெக்டர் ராஜாமணி தனிமைப்படுத்திக்கொண்டார். இப்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையான கேஎம்சிஹெச்சில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.