திருப்பதி கோவிலில் தேங்கி கிடக்கும் ரூ.50 கோடி செல்லாத நோட்டுகள்
1 min read
Rs 50 crore worth of invalid notes stashed in Tirupati temple
15-7-2020
திருப்பதி கோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை மாற்ற மத்திய நிதி மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரூ.50 கோடி
மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதது என்று அறிவித்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிககள் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு கால அவகாசம்அளித்திருந்தன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனால் பக்தர்கள் பலர் திருமலை திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். அந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ. 50 கோடி அளவிற்கு உள்ளது.
கடந்த 4 ஆண்டுகாலமாக வங்கியில் பரிமாற்ற முடியாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
கோரிக்கை
இதுபற்றி திருமலை திருப்பதி கோவில் அறக்கட்டளை தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி கூறும்போது, பக்தர்கள் காணிக்கையாக வழங்குவதை நிராகரிக்க முடியாது என்றார்.
இந்த நிலைியல் அவர் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது கோவில் வசம் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நிர்மலா சீதாராமன் இதுபற்றி ஆராய்வதாகவும் வங்கிஅதிகாரிகளுடன் பேசுவதாகவும் கூறியதாக சுப்பா ரெட்டி தெரிவித்தார்.