June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நோய் உள்ளவர்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஆலோசனைகள்

1 min read
Tips for those with the disease to escape from the corona

17-7-2020

கொரோனா பரவி வரும் இந்த நிலையில் அது ஏற்கனவே நோய் உள்ளவர்களை தாக்கினால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே அப்படிப்பட்டவர்கள் கொரோனா தாக்காமல் இருக்கு மருத்துவர் ஒருவர் வழங்கிய ஆலோசனைகளை இங்கே காணலாம்.

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு, கபசுரக் குடிநீரை பருக வேண்டும். அதுவும் விதிமுறைக்கு உள்பட்ட குறிப்பிட்ட அளவு குடிக்க வேண்டும்.

பருப்பு வகை, முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழுதானியங்களை உட்கொள்ளவும்.
வாரம் ஒரு முறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதனை செய்யவேண்டும்.
கால் மற்றும் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

இஞ்சி-பூண்டு

பச்சை மற்றும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்ணவும். மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

தினமும் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு, நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்சுலின் சிகிச்சையில் இருப்பவர்கள் நீர் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுக வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கொரோனா காலத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமு். எனவே நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளை தாமாக நிறுத்தக் கூடாது.

புகைப்பிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை தவறாமல் சோதிக்கவும்.

மருத்துவரின் ஆலோசனையின்றி சுய வைத்தியம் செய்யக்கூடாது. குறிப்பாக வலி நிவாரணி, ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.

இருதய நோயாளிகள்

இருதய நோயாளிகள் தங்களுக்கு உள்ள தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எதிர்மறை செய்திகளை தவிர்க்கவும்.
வீட்டுக்குள்ளேயே நடைபயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எளிய சுவாசப் பயிற்சிகள் சோர்வை போக்க உதவும்.
தினமும் 8 மணி நேரம் துாங்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முன்பு போலவே தொடர வேண்டும்.
இருதய செயலிழப்பு நோயுள்ளவர்கள் உப்பு மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
மாரடைப்பு நோய்க்கான கரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டவர்கள், தவறாமல் மருந்தை தொடர வேண்டும்.
இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சமநிலை கலோரி உணவு எடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தவிருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.