June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min read

அஜித்

Bomb threat to actor Ajith’s house

தல அஜித் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக கலக்கி வருகிறார். நாளுக்கு நாள் இவரது படங்களின் வசூலும் வியாபாரமும் அதிகமாகி ரசிகர் பட்டாளங்கள் கூடிக்கொண்டே செல்கிறது.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை அஜித் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

கொரானா பாதிப்பால் சினிமா சூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் தல அஜித் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்தின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அஜித்தின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

எந்த ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யார் அந்த அந்த வேலையைச் செய்தது என போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கும் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக ஒரு செய்தி கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.