டிக்-டாக் தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற திட்டம்
1 min read
Plan to move Tic-Tac headquarters to London
19-7-2020
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்-டாக் தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிக்-டாக்
இந்திய மக்களிடையே டிக்-டாக் பெரும் மோகத்தை ஏற்படுத்தி வந்தது. உலகளவில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றாக டிக் டாக் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் 22 ஆயிரம் கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
சென்சார் இல்லாததால் ஆபாச வீடியோக்கள், தற்கொலை காட்சிகள் போன்றவை இதில் அதிகம் பதிவேற்றப்பட்டன. இதனால் சில நேரங்களில் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது. குடும்பங்களில் பிரச்னைகள் உண்டாகின. டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
இந்த நிலையில் தான் மத்திய உளவுத் துறை பரிந்துரை படி இந்திய பயனர்களின் தகவல்களுக்கு ஆபத்தான டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய ஐ.டி அமைச்சகம் தடை செய்தது.
இந்த டிக் டாக் இந்திய பயனர்களின் தகவல்களை சீன அரசுக்கு வழங்கக் கூடும் என்பதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவும் இதை தடை குறித்து பரிசீலித்து வருகிறது. இதனால் டிக்-டாக் நிறுவனம் சீனாவிலிருந்து அதன் தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற முயற்சி செய்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதாவது இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பைட்டான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் கெவின் மேயரை தங்கள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக தேர்ந்தெடுத்துள்ளது. இவர் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.