இந்தியாவில் ஒரே நாளில் 40,425 பேருக்கு கொரோனா 681 பேர் சாவு
1 min read
40,425 person affected for corona and death 681 one day in Idia
20-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4/,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 681 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
38,902 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(திங்கட்கிழமை)) ஒரே நாளில், 40,425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,11,18,043 ஆக உயர்ந்துள்ளது.
681 பேர் சாவு
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 681 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 27,497 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 7,00, 087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,90,459 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை )மட்டும், 2,56,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,40,47,908 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,10,455 பேரும், தமிழகத்தில் 1,70,693 பேரும், டெல்லியில் 1,22,793 பேரும், கர்நாடகாவில் 63,772 பேரும், உத்தர பிரதேசத்தில் 49,247 பேரும், மேற்கு வங்காளத்தில் 42,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில், நேற்று, ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா உறுதியானது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது..
தமிழகத்தில் நேற்று 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 49,650 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தலைநகர் லக்னோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லக்னோவிற்கு அடுத்து கான்பூரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 120 பேர் கொரோனாவுககு பலியாகியுள்ளனர்.
அசாமில் நேற்று மட்டும் 24 மணி நேரத்தில் மட்டும் 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமாநிலத்தில் மொத்தம் 23,999 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.கர்நாடக மாநிலத்தில் நேற்று 4,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் தலைநகர் பெங்களூருவில் மட்டும் 2,156 பேருக்கு தொற்று கொரோனா. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63, 772 ஆக அதிகரித்துள்ளது.அங்கு நேற்றுமட்டும் 91 பேர் இறந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது.. கேரளாவில் நேற்று மட்டும் 821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது