June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி கவசம் படிக்கும் வீடியோ; டுவீட்டர் பக்கத்தில் பதிவு

1 min read
Vijaykanth Kandasashti shield reading video; Post on Twitter page

26-7-2020

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி கவசத்தை படிக்கும் வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கந்தசஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் கொச்சைப்படுத்தி வீடியோ பதிவு செய்து யூ-டியூப்பிலர் வெளியிட்டனர். இதற்கு கடும் கண்டனம் பக்தர்கள் மத்தியில் வந்தது.
இதனை அடுத்து பாரதீய ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். சென்யை தி.நகரில் உள்ள அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட 50 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டது.

விஜயகாந்த்

கறுப்பர் கூட்டம் அமைப்பினருக்கு நடிகர் ரஜினிகாந்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தமது அந்தப் பதிவின் முடிவில், “கந்தனுக்கு அரோகரா… .எம்மதமும் சம்மதம்” என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். ”வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் ” என விஜயகாந்த் தனது டுவீட்டரில்
குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *