June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சொப்னாவுக்கு கேரள முதல்வருடன் நேரடி பழக்கம் -நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்

1 min read

6.8.2020

Sopna’s direct acquaintance with Kerala Chief Minister – NIA shocking information in court

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை 2 முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே முதல்முறை நடந்த விசாரணையில், இது அரசியல் ரீதியாக பழிவாங்க ெதாடர்ந்த வழக்கு எனவும், ‘உபா’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சொப்னா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியிருந்தார்.

இதையடுத்து ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்கள் மற்றும் கேஸ் டயரியை தாக்கல் செய்யுமாறு என்ஐஏயிடம் நீதிமன்றம் தெரிவித்தது. இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஐஏ நீதிமன்றத்தில் அவற்றை தாக்கல் செய்தது. அவற்றை பரிசீலித்த பின்னர், 6ம் தேதி (இன்று) ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. என்ஐஏ தரப்பில் உதவி சொலீசிட்டர் ஜெனரல் விஜயகுமார் ஆஜரானார். அவர் கூறியது: சொப்னாவுக்கு கேரள முதல்வர் அலுவலகம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் காவல்துறையில் பெரும் செல்வாக்கு இருந்தது. மேலும் முதல்வர் பினராயி விஜயனிடம் நேரடி பழக்கமும் இருந்தது. எனவே இவரை ஜாமீனில் விடுவித்தால், தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உண்டு.

தங்க கடத்தல் மூலம் இவர் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றார். சொப்னாவுக்கு சிவசங்கர் ஒரு வழிகாட்டி போல செயல்பட்டு வந்துள்ளார். கேரள அரசின் ஐடி துறை விண்வெளி பூங்காவில் சிவசங்கர்தான் வேலை வாங்கி கொடுத்தார். அமீரக தூதரகத்தில் இருந்து ராஜினாமா செய்த பிறகும் அவருக்கு அங்கு பெரும் செல்வாக்கு இருந்து வந்தது. பதவியில் இல்லாதபோதும் பல மாதங்களாக அவருக்கு 1,000 டாலர் வரை தூதரகத்தில் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சலை சுங்க இலாகா பிடித்து வைத்தபோது அதை விடுவிக்க வேண்டும் என சொப்னா நேரடியாக கூறினார். ஆனால் சுங்க இலாகா மறுத்ததை தொடர்ந்து சொப்னா திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் அருகில் உள்ள சிவசங்கரின் பிளாட்டுக்கு சென்று பார்சலை விடுவிக்க கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

சொப்னாவிடம் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இவை திருமணத்தின்போது தனக்கு கிடைத்தவை என அவர் கூறினார். ஆனால் அவர் திருமணத்தின்போது 5 கிலோ தங்க நகைகள் மட்டுமே அணிந்திருந்தார். இவ்வாறு வக்கீல் கூறினார். தொடர்ந்து சொப்னாவின் திருமண போட்டோவையும் என்ஐஏ வக்கீல் நீதிமன்றத்தில் வழங்கினார்.

தொடர்ந்து சாெப்னா தரப்பு வக்கீல் வாதிட்டார். அவர் கூறும்போது ெபாருளாதார குற்றமாகவே இந்த வழக்கை கருத ேவண்டும். இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இந்த வழக்கை சுங்க இலாகா, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த அமைப்புகள் இந்த வழக்கில் தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை வெளியிடவில்லை என வாதிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.