September 29, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா 803 பேர் சாவு

1 min read

In Idia corona affected 62.538 and death 803 one day

7-8-2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 886 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

62,538 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோன நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் நேற்று(வியாழக் கிழமை)) ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 20,27,075 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 886 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  41,585 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 49,769 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை மொத்தம் 13,78,106 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,07,384 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 5,74,783 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனால், மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,27,24,134 ஆக அதிகரித்தது.

மராட்டியம் முதலிடம்

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மராட்டியம் முதலிடம் உள்ளது. இந்த மாநிலத்தில் 4,79,779 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை 16,702 பேர் கொரோனாவுக்கு இறந்துளளனர்.

அதனை அடுத்து தமிழகம் உள்ளது. இங்கு 2, 79,144 பேருக்கு கொரோனா உள்ளது. இதுவரை 4,059 பேர் இறந்துள்ளனர்.

ஆந்திராவில் 1,96,789 பேரும், கர்நாடகால், 1,58,254 பேரும் டெல்லியில் 1,41,531 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *