நெல்லை, தென்காசியில் கொரோனா பாதிப்பு நிலவரம்
1 min read
Corona affected condition in Nellai, Tenkasi
12-8-2020
நெல்லை தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் கடைத்துள்ளன.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 137 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6938 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் இந்த மாவட்டத்தில் 366 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 5262 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது இந்த நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 99 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையம் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3481 ஆக அதிகரித்தது.
இன்று மட்டும் இந்த மாவட்டத்தில் 29 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2055 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 1369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்க 3 பேர் இறந்துள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 157 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9626 ஆக உயர்ந்துள்ளது. இன்று 207 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இந்த மாவட்டத்தில் இதுவரை 7925 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 1619 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்துள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.