June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

1 min read


Tamil speaking security guards at Chennai airport

12-8-2020

சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வட இந்தியர்களின் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வடஇந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகஉள்ளது. குறிப்பாக சாதாரண மக்களுடன் தொடர்புடைய அலுவலத்தில் கூட அவர்களில் பலர் வேலையில் அமர்ந்துள்ளனர். உதாரணமாக ரெயில்வே, தபால் நிலையம், வங்கிகள் போன்றவற்றில் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களால் சாதாரண மக்களிடம் உரையாட முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு இந்த மொழி பிரச்சினை காரணமாக மதுரை திருமங்கலம் அருகே பெரிய ரெயில் விபத்துகூட நிகழ இருந்தது.

எனவே மக்களோடு தொடர்புடைய பணிகளுக்கு அந்தந்த மாநிலத்தவர்களை மட்டுமே பணி அமர்த்த வேண்டும். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இந்த விசயத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்று சேர வேண்டும்.

விமானநிலையம்

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் இந்தியரா? என பெண் பாதுகாவலர் ஒருவர் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி பேட்டி

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் என்னை இந்தியரா என்று கேட்ட பெண் பாது காவலர் மீது நடவடிக்கை எடுத்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்ததேன். என்னிடம் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.

இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி தமக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பது விஷயம் கிடையாது என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *