விநாயகர் சதுர்த்தி- பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை
1 min read
Ganesha Chaturthi- It is not allowed to place idols in public places
13-8-2020
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இடையாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனுமதி இல்லை
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை
சிறிய கோவில்களில்…
அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி உண்டு.
கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.