அந்த கதையா? வேண்டாம்- ரூ.4கோடி பேசியும் நடிக்க மறுத்த நயன்தாரா
1 min read
இந்திய சினிமாவில் நயன்தாராவை போல வேறு ஏதேனும் நடிகைகள் இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்றால் சந்தேகம்தான். அதிலும் அம்மணிக்கு காதல் என்றால் அவ்வளவு பிடிக்கும்.
சிம்பு நயன்தாரா, பிரபுதேவா நயன்தாரா வரிசையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா எனும் அளவுக்கு மாறி உள்ளது. நயன்தாராவின் காதல் வரலாற்றில் விக்னேஷ் சிவன் உடன் தான் அதிக நாட்கள் காதலிலிருந்து உள்ளாராம்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒரு கள்ளக்காதல் சம்பந்தப்பட்ட கதையில் நடிப்பதற்கான வாய்ப்பு நயன்தாராவை தேடி வந்துள்ளது.
தெலுங்கில் சமீபத்தில் பீஷ்மா என்ற வெற்றி படத்தை கொடுத்த நிதின் சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படமொன்றில் நயன்தாராவை திருமணத்திற்கு பிறகு வேறொரு ஆணுடன் கள்ளக்காதல் கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்காக 4 கோடி வரை சம்பளம் பேசி விட்டார்களாம். ஆனால் நயன்தாராவுக்கு இந்த படத்தில் நடிக்க சுத்தமாக விருப்பம் இல்லையாம். இந்த படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்.
எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதால் வருத்தத்தில் உள்ளதாக படக்குழு. ஏற்கனவே அந்த மாதிரி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் என நினைத்து கேட்டுள்ளனர்.
ஆனால் நயன்தாரா இதற்கு முன்னால் பட்டது போதும் என எஸ்கேப் ஆகிவிட்டாராம்.