June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

உலகில் அதிக குளிர் கொண்ட கிராமம் Oymyakon -மைனஸ் 72 டிகிரி

1 min read
The coldest village in the world is Oymyakon -72 degrees

நம்மில் பலருக்கு வீட்டில் Air conditioner அதிக நேரம் இயங்கினாலே உடல் குளிரில் நடுங்க ஆரம்பித்து விடும். ஆனால், ரஷ்யாவில் உள்ள “Oymyakon” என்னும் கிராமம் தான் உலகிலேயே கடும் குளிரான இடமாக திகழ்கிறது.

ஆம், இந்த இடத்தில் குளிர்காலத்தில் -71.2 என்ற டிகிரி அளவில் கடுமையான குளிர் நிலவுகிறது.

உலகிலேயே அதிக குளிர் பகுதியான இந்த ஊர் ‘குளிர் துருவம்’ (Pole of Cold) என அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் -71.2 டிகிரியில் இருக்கும் இந்த கிராம பகுதி ஜூன், ஜூலை போன்ற கோடை காலத்தில் 30 டிகிரி அளவிலான வானிலை கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது தான் பொதுவான காலம். ஆனால் Oymyakonல் டிசம்பர் மாதம் மட்டும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் குறைந்து 21 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.

காலநிலை மிகவும் வறண்டது, ஆனால், சராசரி மாத வெப்பநிலை ஆண்டின் ஏழு மாதங்களுக்கு உறைபனிக்குக் குறைவாக இருப்பதால், கணிசமான ஆவியாதல் கோடை மாதங்களில் மட்டுமே நிகழ்கிறது. குளிர்காலத்தை விட கோடை காலம் மிகவும் ஈரமாக இருக்கும்.

2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 500பேர் இங்குவசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் கடும் குளிரில் ஏதும் விளையாததால் இந்த ஊர் மக்களுக்கு மான் இறைச்சி, மீன் மற்றும் குதிரை இறைச்சி மட்டுமே உணவாக இருக்கிறது.

இந்த கிராமத்தில் ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகளவில் பால் குடிப்பதால் இவர்களுக்கு ஊட்டச்சத்து பிரச்சனை ஏற்ப்படுவதில்லை. இங்கு வசிப்பவர்களுக்கு மிருகங்களை வேட்டையாடுவது, மீன் பிடிப்பது தான் பிரதான தொழிலாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.