இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது- பரிசோதனையில் தகவல்
1 min read
The corona vaccine made in India is safe- information in the test
14-8-2020
கொரோனாவுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யா கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக முதலில் அறிவித்தது. ஆனாலும் இதனை உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு நாடுகள் இதுவரை ஏற்கவில்லை.
இந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளது.
நாடு முழுவதும் 12 இடங்களில் 375 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. முதல்கட்ட பரிசோதனையில் ஒவ்வொருக்கும் தலா இரண்டு டோஸ் மருந்து செலுத்தப்பட்டது.
பாதுகாப்பானது
முதல்கட்ட பரிசோதனையின் முடிவுகள் குறித்து முதன்மை ஆய்வாளரான சவிதா வர்மா கூறியதாவது;-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது. எங்கள் தளத்தில் எந்தவொரு தன்னார்வலரிடமும் எந்தவிதமான பாதகமான நிகழ்வுகளையும் ஏற்படுத்தவில்லை. அது பாதுகாப்பானது என்று இப்போது எங்களுக்கு தெரியும். இரண்டாவது கட்டமாக, தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய மாதிரிகளை சேகரிக்க வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார்.