ஊட்டச்சத்து சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்வதே கொரோனாவை விரட்ட ஒரே வழி; உலக சுகாதார அமைப்பு அறவுரை
1 min read
The only way to get rid of corona is to eat nutritious food and exercise; World Health Organization Report
14-8-2020
ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு உடற்பயிச்சி செய்வதே கொரோனாவை விரட்ட ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
தடுப்பு மருந்து
உலகம் எங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டு பிடித்துவிட்டதாக கூறுகிறது. ஆனாலும் உலக சுகாதார அமைப்பு இதறகான மருந்தை கண்டு பிடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறது. காரணம் கொரோனா வைரஸ் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுதானாம்.
இதுவரை கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 29 விதமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் வீரியம் மாறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டின் காலநிலை, நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, உணவு, வயது உள்ளிட்ட பல காரணிகள் தடுப்பு மருந்தின் வீரியத்தை முடிவு செய்கின்றன. ஆகவே கொரோனாவை ஒழிக்க ஒரே ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
இதுபற்றி உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானி வாஸ் நரசிம்மன் கூறியதாவது:-
மனிதர்களை சுற்றும் வைரஸ்
எந்த ஒரு வைரசுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மனித இனமே பின்னடைவில் தான் உள்ளது. ஒரு வைரஸ் உலகில் பரவத் தொடங்கினால், அது நம்மையே சுற்றிக் கொண்டிருக்கும். மலேரியா, டெங்கு, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட வைரஸ்கள் அவ்வப்போது மனிதர்களை சுற்றிக்கொண்டே வருவதை கூறலாம்.
உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரே ஒரு வைரஸ் சின்னம்மை வைரஸ்தான். இதைத்தவிர வேறு எந்த வைரசும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அவ்வப்போது இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு மனித இனம் தன்னை தற்காத்துக்கொண்டு வருகிறது.
பல ஆண்டுகள் ஆகும்
இதுவரை உலகம் முழுவதும் 7.5 லட்சம் மக்களை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை அடைந்துவருகிறது. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். தற்போது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்துபடி, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை வைரசின் வீரியத்தை வேண்டுமானால் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானி சவுமியா சாமிநாதன்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறியதாவது:-
இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது கொரோனா பற்றிய அச்சம் குறைந்து விட்டது. விரைவில் பூரண குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வாழ்வதே கொரோனாவை விரட்ட ஒரே வழி.
இனி வரும் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் இன்னும் பல்வேறு மாறுபாடுகளை அடையும். அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.