அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சதோதரர் மரணம்
1 min read
US President Trump's brother Death
16-8-2020
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சகோதரர்மரணம் அடைந்தார்.
டிரம்ப்பின் சகோதரர்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு பிரெட் டிரம்ப், ராபர்ட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உண்டு. இதில் ராபர்ட் டிரம்ப் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ஆவார்.
72 வயது நிரம்பிய ராபர்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். மேலும், டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
மரணம்
ராபர்ட் டிரம்ப் உடலநலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்தார். அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபர்ட் டிரம்ப் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இளைய சகோதரர் ராபர்ட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
சகோதரர் ராபர்ட் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ராபர்ட் எனது சகோதரன் மட்டுமல்ல, எனது நல்ல நண்பன். அவரை பெரிதும் தவறவிடுகிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம்” என்று கூறினார்.