மாநகராட்சி கோவில்களில் பிரசாதம் வழங்க தடை
1 min read
Dont allowed ” Prasatham” to people in coporation city temple
17-8-2020
சென்னை மாநகராட்சி பகுதியில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள, வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெறிமுறைகள்
மாநகராட்சி பகுதியில் ஆண்டுக்கு 10 ஆயிரதம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரசாதம் வழங்க கூடாது
வழிபாட்டு தலங்களை தினமும், மூன்று முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். நுழைவாயில்களில், கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்தவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் வேண்டும்.பிரசாதம் வழங்க அனுமதி இல்லை. அனைத்து அலுவலர்களுக்கும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம், மூடும் நேர விவரங்களை நுழைவாயிலில் வைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது, பேரிடம் மேலாண்மை சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியை பெற, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதில், வழிபாட்டு தலம் அமைந்துள்ள வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதி பெறப்பட்டபின், அந்த அனுமதியை வழிபாட்டு தலங்களில், அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.