June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஜனவரி 15-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1 min read
Final voter list released in Tamil Nadu on January 15

17-8-2020

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வெளியிடப்படும் என்னு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ( 2021ம் ஆண்டு) மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறபட்டிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல்

வருகிற நவம்பர்16 -ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 5-ந் தேதி வரை வாக்காளர்கள், பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்யலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி 15-ந் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் இருப்பின் தகுந்த ஆதாரங்களோடு ஆன்லைன் மூலம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் செய்யலாம். சிறப்பு முகாம்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.