July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

பனியில் விழுந்து இறந்த ராணுவ வீரரின் உடல் 7 மாதங்களுக்கு பிறகு மீட்பு

1 min read
The body of a soldier who fell in the snow and died was recovered after 7 months

17-8-2020
காஷ்மீரின், எல்லைப் பகுதியில் பனிக்குள் விழுந்த ராணுவ வீரரின் உடலை, 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் மீட்டனர்.

பனியில் விழுந்தார்

உத்தரபிரதேச மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் நேகி(வயது 36). இவருடைய மனைவி ராஜேஸ்வரி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் உத்தரகண்ட் மாமநிலம் டேராடூனில் வசித்து வந்தனர்.
ராஜேந்திர சிங் நேகி கடந்த 2001-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். ‘கார்வால் ரைபிள்ஸ்’ பிரிவில், ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஜனவரி, 8-ந் தேதி, ஜம்மு – காஷ்மீரின் குல்மார்க் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பணியில் இருந்தார். அப்போது அவர் அடர் பனிக்குள் விழுந்தார். அவரை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுனர். 3 மாதங்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பணியில் வீர மரணம் அடைந்ததாக ராணுவத்தினர் முடிவு செய்தனர்.

இது குறித்து, ஜூன் மாதம் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ராணுவத்தின் முடிவை ஏற்க மறுத்த, அவரது மனைவி ராஜேஸ்வரி தேவி, ‘கணவரின் உடலை பார்த்தால் மட்டுமே, அவர் மரணம் அடைந்தாக ஒப்புக் கொள்வேன்’ என்று கூறிவிட்டார்.

மீட்பு

இந்தநிலையில், கார்வால் ரைபிள்ஸ் படை பிரிவினர், மாயமான ராஜேந்திர சிங்கின் உடலை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பனிக்கட்டிகளின் அடியில், நேற்று முன்தினம் கண்டுபிடித்து மீட்டனர்.
இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் அங்கு வந்து, உடலை பதப்படுத்தி, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
நாளை மறுநாள்( புதன்கிழமை) அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று ெ
தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.