June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்திரி அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read
Union Minister Amit Shah admitted to Delhi Aims Hospital

18-8-2020

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு, கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதனையடுத்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, குணமடைந்தார். பின்னர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்தி கொண்டார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்வலி

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 3 – 4 நாட்களாக அமித்ஷாவுக்கு உடல்வலி மற்றும் உடற்சோர்வு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏதும் இல்லை. தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார். ஆஸ்பத்திரியில்
இருந்தபடியே தனது பணியை தொடர்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.