June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சென்னை கோவிலுக்கு 108 தேங்காய் உடைத்தவர்

1 min read
US Vice Presidential candidate Kamala Harris breaks 108 coconuts at Chennai temple

18-8-2020

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக உள்ள கமலா ஹாரிஸ் இதற்கு முன்பு அட்டர்னிஜெனரல் தேர்தலில் போட்டியிட்ட போது, சென்னையில் உள்ள தன் சித்தி மூலம் பெசன்ட்ட நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு 108 தேங்காய்களை உடைத்தார்.

கமலாஹாரிஸ்

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 55 வயதான கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா சென்னையை சேர்ந்தவர்.

இந்த நிலையில், கமலா ஹாரிசுக்கும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்திற்கும் இடையிலான உறவு குறித்து, அமெரிக்காவின், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், நேற்று ஒரு சிறப்பு கட்டுரையை பிரசுரித்து உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னைக்கு…

கமலா ஹாரிஸ் சிறு வயதில் சென்னையில் உள்ள தன் தாத்தா கோபாலன் மற்றும் பாட்டி ராஜம் கோபாலனை சந்திக்க பலமுறை சென்னைக்கு வந்துள்ளார்.

பெசன்ட் நகர் கடற்கரையில், தன் தாத்தாவுடன் நடந்து போனதை அவர் மறக்கவில்லை. கமலா ஹாரிசுக்கு, அவரது தாத்தா, பல நீதிக் கதைகளை கூறியுள்ளார்.

108 தேங்காய்

கடந்த, 2010-ம் ஆ ண்டு, கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில், கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பு அவர் சென்னையில் உள்ள தன் சித்தி சரளா கோபாலனை தொடர்புகொண்டு, பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே உள்ள கோவிலுக்கு 108
தேங்காய்களை உடைக்குமாறு கூறியுள்ளார்.

கமலா ஹாரிசின் குடும்ப நண்பரும், பக்கத்து வீட்டுக்காரருமான வியாஸ் என்பவர், கமலாஹாரிசின் குடும்பத்தை பெருமையாக குறிப்பிடுகிறார்“அவர்கள் குடும்பத்தார் நேர்மையான, வெளிப்படையான மற்றும் மகிழ்ச்சியான மனிதர்கள்,” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.