பிரணாப்முகர்ஜி உடல் நிலையில் சற்று முன்னேற்றம்
1 min read
Slight improvement in Pranab Mukherjee's physical condition
20-8-2020
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
பிரணாப் முகர்ஜி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை பின்னடைவை கண்டது.
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வென்டிலேட்டரில் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.
ஆனாலும் பிரணாப்பின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது தகவல் வெளியிடப்படுகிறது.
நேற்றும்( புதன்கிழமை) அவரது உடல்நிலை அதே நிலையில் இருந்தது. நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
லேசான முன்னேற்றம்
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுபற்றி மருத்துமனை வட்டாராங்கள் கூறும்போது, “பிரணாப்முகர்ஜி வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தபோதிலும், பிரணாப் முகர்ஜியின் சுவாச அளவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்கின்றன. மருத்துவ நிபுணர் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது”என்றார்கள்.