இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டு
1 min read
Five terrorists shot dead as they tried to infiltrate into India
22-8-2020
பஞ்சாப் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு
படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம்
இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன.
ஊடுருவ முயற்சி
பஞ்சாப் மாநிலம் தர்ன் தாரன் பகுதியை
ஒட்டி அமைந்துள்ள சர்வதேச எல்லை
பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரின் நடமாட்டம் இருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள்
அறிந்தனர். அவர்களை சரணடையும்படி
பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை
விடுத்தனர்.
ஆனால், அதனை கண்டு
கொள்ளாத அவர்கள், இந்தியாவுக்குள்
ஊடுருவ முயற்சி செய்யும் வகையில், எல்லை
பாதுகாப்பு படை வீரர்கள் மீது
துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
5 பேர் சுட்டுக் கொலை
அதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 5 சுட்டு
கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் 5 பேருக்கும் பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த
பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 9 கிலோ
ஹெராயின், ஏகே 47 ரக துப்பாக்கிகள்,
தோட்டாக்கள், துப்பாக்கிகள்,
செல்போன்கள், பாகிஸ்தான் கரன்சி
மற்றும் சில ஆயுதங்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.