June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

“மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம்” – மத்திய அரசு அறிவுரை

1 min read
"Do not restrict interstate traffic" - 
Central Government advice to states

22-8-2020

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பலமுறை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சிற்சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்த வகையில் பல மாநிலங்களில் போக்குவரத்து நடைபெறுகிறது.
ஆனால் தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு இன்னும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இ-பாஸ் வழங்குவதில தற்போது தமிழக அரசு எளிமை படுத்தி இருந்தாலும் பொது போக்குவரத்து இல்லாததால் பாமர மக்களால் எந்த முக்கியமான செயலுக்கும் வெளியூர் செல்ல முடியவில்லை. மேலும் சாதாரண தொழிலாளிகளால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

தடை செய்ய வேண்டாம்

இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறி இருருப்பதாவது:

மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.

பொருளாதாரம் பாதிப்பு

மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *