June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா நீட்டிப்பு

1 min read


Sonia’s extension as Congress interim president

24-8-2020
அகில இந்திய இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அந்தக் கட்சி அறிவித்து உள்ளது.

சோனியா

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி இருந்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பு ஏற்று ராகுல்காந்தி தலைவர் பொறுப்பைவிட்டு விலகினார்.
இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்போன்றார். அவர் பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்தது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

நீட்டிப்பு

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணியளவில் முடிந்தது.

கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமை இல்லை. கட்சியின் உள் விவகாரங்கள் ஊடகங்கள் மூலமாக வெளியில் தெரிவிக்க முடியாது. கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே தொடர்வார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.