தமிழகத்தில் ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா- 6,334 பேர் டிஸ்சார்ஜ்
1 min readCorona to 6,334 people and discharged to 5,976 people one day in Tamil Nadu
4-9-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரரம் 6,334 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
5,976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மாலையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 25 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 155 ஆய்வகங்களில் 83,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 51 லட்சத்து 30 ஆயிரத்து 741 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஜ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,604 பேர் ஆண்கள். 2,372 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,72,739 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,79,059 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,334 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக உள்ளது.
79 பேர் சாவு
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 79 பேர்
இறந்துள்ளனர். இதில் 51 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 28 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,687 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 51,633 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகள் என 20 ஆயிரத்து 506 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 348 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 973 பேர்.
சென்னையில்..
சென்னையில் இன்று மட்டும் 992 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,39,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர கோவையில் 595 பேருக்கும், கடலூரில் 499 பேருக்கும், செங்கல்பட்டில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 260 பேருக்கும், சேலத்தில் 239 பேருக்கும், திருவண்ணாமலையில் 216 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 182 பேருக்கும், தஞ்சாவூரில் 164 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 114 பேருக்கும், தென்காசியில் 85 பேருக்கும், தூத்துக்குடியில் 45 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.
இன்று சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், சேலம், விழுப்புரத்தில் தலா 5 பேரும், கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரையில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூரில் தலா 2 பேரும், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,040 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் இதுவரை மொத்தம் 1,24,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் இன்று 428 பேரும், செங்கல்பட்டில் 404 பேரும், விழுப்புரத்தில் 379 பேரும், காஞ்சிபுரத்தில் 330 பேரும், திருவள்ளூரில் 309 பேரும், சேலத்தில் 293 பேரும், கன்னியாகுமரியில் 225 பேரும், விருதுநகரில் 222 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.