12-ந் தேதி முதல் மேலும் 80 ரெயில்கள்; இந்திய ரெயில்வே அறிவிப்பு
1 min read80 more trains from the 12th; Indian Railways Announcement
5-9-2020
இந்தியாவில் வருகிற 12-ந் தேதி முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரெயில்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயிலகள் இயக்கப்பட்டன.
இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. தற்போது இந்தியா முழுவதும் 230 சிறப்பு ரெயிலகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வருகிற 12-ந் தேதி முதல் மேலும் 80 சிறப்பு ரெயிலகள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 12ம் தேதி முதல் இயக்கப்படும் 80 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது என்று கூறப்பட்டு உள்ளது. இனி பயணிகள் தேவைக்கு ஏற்ப படிப்படியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.