எல்லை பதற்றத்துக்கு இந்தியாதான் காரணமாம்; சீனா அபாண்டம்
1 min read
India is to blame for border tensions; China Abandoned
5-9-2020
இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை மற்றும் பிரச்சினைக்கு முழு காரணமும் இந்தியாதான் என்று சீனா அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா -சீனா
இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீனா முயற்சி செய்து வருகிறது. இதற்காக சீனா தனது துருப்புகளை எல்லையில் குவித்து வருகிறது.
இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு அவர் சீன பாதுகாப்பு மந்திரி வி வெங்கயை சந்தித்து பேசினார். அப்போது அவர், “எல்லையில் அதிகளவில் ராணுவத்தை குவிப்பது மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு தற்போதைய சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்வது போன்ற சீனாவின் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். எல்லை நிர்வாகத்தில் இந்திய படைகள், பொறுப்பான அணுகுமுறையை கையாள்கின்றன.” என்று கூறியுள்ளார்
“தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதுடன், எல்லையில், முற்றிலுமாக படைகளை வாபஸ் பெறுவதுடன் மற்றும் பதற்றத்தை தணித்து முழுமையான அமைதியை கொண்டு வர வேண்டும். இருதரப்பு ஒப்பந்தப்படி,எல்லையில் பாங்காங் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் படைகளை விரைவாக திரும்ப பெறுவதில், இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்ற வேண்டும்.” என்றும் கூறினார்.
சீனா அபாண்டம்
இந்நிலையில், இந்தியா மீது சீனா அபாண்ட குற்றச்சாட்டை கூறியுள்ளது. இதுபற்றி சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சீனா – இந்தியா எல்லையில் தற்போதைய பதற்றத்தின் காரணங்களும் உண்மையும் தெளிவாக உள்ளன. எல்லையில் நிலவும் பிரச்னை மற்றும் பதற்றத்துக்கு முற்றிலும் இந்தியாதான் காரணம். எங்களது பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட இழக்க சீனா தயாராக இல்லை. தேசிய இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட ஆயுத படைகள் முழு பலத்தோடு உள்ளது.
அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி எடுத்த முடிவுகளை இந்தியா உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.