July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வு எழுத காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதர-சகோதரிகள்

1 min read

Pakistani brother and sisters waiting to write the NEET exam

6-9-2020

இந்தியாவில் நீட் தேர்வு எழுத பாகிஸ்தானை சகோதர-சகோதரிகள் 3 பேர் விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.

நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வான “நீட்” தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நீட் தேர்வுக்கு பாகிஸ்தான் மாணவ-மாணவிகள் 3பேர் விண்ணப்பித்து உள்ளனர். அந்த பாகிஸ்தான் மாணவர்கள் மூன்று பேர் மத்திய அரசின் விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள ஒருவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு வசித்து வரும் ஹக்கிம் மால் ஒரு டாக்டர். இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூவரும் டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டனர். இதற்காக இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்கள் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

விசா

சமீபத்தில் வெளியான நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் இவர்களுக்கான தேர்வு மையம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இடம்பெற்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் விசா ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து இந்தியாவில் உள்ள மாணவர்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது:-
இந்திய தூதரகம், மாணவர்களின் ஆவணங்களை ஆராயும் வரை அவர்கள் இஸ்லாமாபாத்தில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுத இருக்கும் 3 பேருக்கான கொரோனா வைரஸ் அறிக்கைகள் எதிர்மறையாக வந்துள்ளன. இந்திய மிஷன் அவர்களின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் அவர்கள் இறுதி முடிவை எடுக்கும்போது, ​​அவர்கள் இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.