கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடம்
1 min read
India ranks 2nd in corona impact
7-9-2020
கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
கொரோனா
இந்தியாவில் எத்தனையோ கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட விவரம் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 4 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 1,016 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 71,642 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 69,563 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை மொத்த் 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
2-வது இடம்
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-வது இடத்திலும் இந்தியா 3-வது இடத்திலும் அதன் பின் ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 64.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்தனர். இதனால் பிரேசிலை இந்தியா பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு வந்துவிட்டது.
இந்தியாவில் கொரோனாவால் 42.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரேசிலில் 41.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசலில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 686 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பிரேசிலில் உயிரிழப்பும், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.