தமிழகத்தில் அக்டோபர் 5-ந் தேதி முதல் பள்ளிக்கூடம் திறப்பு?
1 min read
school to open in Tamil Nadu on October 5?
11-9-2020
தமிழ் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்கப்படலாம் என்றும் அப்போது 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசு அறிவிப்பு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வருகிற 21-ந் தேதி முதல், பள்ளிகள் திறப்பது குறித்து, வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களை என்போது திறக்கலாம் என்பது பற்றிய வழிகாட்டு முறைகளை தயாரிக்க கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசித்தனர்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்க திட்டப்பிடப்பட்டு உள்ளது அதுவும் முதலில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலோசனை
இது குறித்து மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்ட நிலை குறித்து, கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி திறப்பதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால், ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டும் அமர வைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் வகுப்பு நடத்த, அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய பாடங்கள்
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது , “ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதால், சமூக இடைவெளி கடைபிடிக்க முடியும். காலை, மதியம் என சுழற்சி முறையில், முக்கிய பாடங்கள், செய்முறை பகுதிகள் மட்டும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு பிரத்யேக நேர, பாட அட்டவணை தயாரிக்கப்படும். அதன்பின் அவை பள்ளிகளுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம். பள்ளிகளில் மாணவர்களை அமர வைத்தல், வளாகம் முழுக்க கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் உள்ளிட்ட, சில நடைமுறைகளை பின்பற்றிய பிறகே, வகுப்பு நடத்தப்படும். இதுசார்ந்த விரிவான வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்படும்” என்றனர்.