உலக பணக்காரர்களில் அமேசான் நிறுவனத்தினர் முதலிடம்
1 min read
Amazon is the richest company in the world
12-9-2020
உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடத்தில் உள்ளனர். முகேஷ் அம்பானி 5ம் இடத்தில் இருக்கிறார்.
பணக்காரர்கள்
அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்திய மதிப்பில் ரூ 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 5ம் இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 6 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உள்ளது.
பில்கேட்ஸ்
உலக அளவில் இரண்டாம் இடத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ 8 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் மூன்றாம் இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி.
ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் ஆர் மஸ்க் ரூ 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.