June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

1 min read

Another student commits suicide for fear of need selection

12-9-2020

நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை செய்த நிலையில் மேலும் தர்மபுரி மாணவரும் தற்கொலை செய்துள்ள தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

தற்கொலை

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்திலும் இன்று தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தேர்வுக்கு பயந்து மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ (வயது 19) என்ற மாணவி இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன்பு தேர்வு பயம் காரணமாக கடிதம் எழுதி வைத்திருந்தார்.

மாணவர்

இந்த நிலையில் தர்மபுரியிலும் ஒரு மாணவர் நீட்தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது பெயர் ஆதித்யா(வயது 20). இவர் தர்மபுரி செந்தில் நகரைச் சேர்ந்தவர். இவர் இந்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார். இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் இரண்டாவது முறை தேர்வு எழுத தயாராகி வந்தார்.

நாளை தேர்வு எழுத வேண்டிய நிலையில் ஆதித்யா இன்று (சனிக்கிழமை) தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வு நெருங்கியதால் தோல்வி பயம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வுக்கு பயந்து ஒரே நாளில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *