July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

குப்புறப் படுத்தால் கொரோனா குணமாகுமா?

1 min read

Can the corona be healed by rubbing?

13-9-2020

கொரோனா பாதிப்பில் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு சென்றவர்களை குப்புறப்படுக்க வைத்தால் குணமாக்கிவிடலாம் என்று ஒரு ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.

வென்டிலேட்டர்

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி ஒரு புறம் நடந்தாலும் கொரோனா பற்றிய வேறுவிதமான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா தாக்கப்பட்ட தீவிரம் அடைந்தால் அது நுரையீரலை பாதிக்கிறது. அதனால் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் சுவாசம் சிக்கலாகிறது. அப்படிப்பட்ட நிலையில் நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள்.

இப்படி வென்டிலேட்டரில் வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

குப்புற படுக்க வைப்பது

  • வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை குப்புற படுக்க வைக்கிறபோது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.
  • நரம்பு பாதிப்பானது, ரத்த ஓட்டம் குறைவது மற்றும் வீக்கம் குறைவதின் விளைவாகும்.

மூட்டுகள் பலவீனம்

  • கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மறுவாழ்வு பெறுகிறபோது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக் கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயாளிகளிடமும் இந்தளவுக்கு நரம்பு பாதிப்பு காணப்படுவதில்லை.
  • கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம் பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த வகையில் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானோர் இதை அனுபவிக்கின்றனர்.

தோள்பட்டை

  • பெரும்பாலும் மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாட்டு இழப்பு, தோள்பட்டை முடக்கம் ஏற்படுகிறது.
  • நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்கனவே இருக்கிறபோது, அது கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்களை முழுமையாக மீட்க முடியாது. நடக்கவோ, கணினி அல்லது செல்போனை கைகளால் பயன்படுத்தவதோ கடினமாகி விடும்.

இவ்வாறு அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.