தமிழகத்தில் இன்று 5,717 பேர் கொரோனாவில் இருந்து குணம் ஆனார்கள்
1 min read
In Tamil Nadu today 5,717 people recovered from the corona
13-9-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,717 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 5,693 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,717 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக உள்ளது.
74 பேர் சாவு
கொரோனாவால் இன்று மட்டும் 74 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 47,012 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று மட்டும் 84, 308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 82, 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,01,399 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.