இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 97,894 people one day in India
17-9-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. அதே நேரம் கொரோனாவில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலான விசயம்.
இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றிய தகவலை தினமும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று(வியாழக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று( புதன்கிழமை) மட்டும் 97,894 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,132 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 82719 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை கொரேனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,42,361ல் இருந்து 40,25,080 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 10,09,976 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
பரிசோதனை
கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 6,05,65,728 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,36,613 சாம்பிள்கள் பரிசோதனை சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.