தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா; 5,005 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 5,015 people in Tamil Nadu today; 5,005 discharged
11/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5015 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் இன்று மட்டும் 5,005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா இன்னும் பரவி வரும் நிலையில் அதைவிட கொஞ்சம் அதிகமாகவே குணமாகி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 5,015 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தஎண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 191 ஆய்வகங்களில் 90,107 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 83 லட்சத்து 22 ஆயிரத்து 832 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,053 பேர் ஆண்கள். 1,962 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,96,505. பெண்களின் எண்ணிக்கை 2,59,849. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில்இன்று மட்டும் 5,005 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனாவுக்கு 65 பேர் இறந்துள்ளதுள்ளனர். இதில் 26 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 39 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களையும் சேர்த்து , தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 10,252 பேர் இறந்துள்ளனர். தற்போது 44,095 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,250 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனாவால்1,82,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர இன்று, கோவையில் 389 பேருக்கும், சேலத்தில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 258 பேருக்கும், திருவள்ளூரில் 198 பேருக்கும், தஞ்சாவூரில் 181 பேருக்கும், திருப்பூரில் 172 பேருக்கும், ஈரோடில் 163 பேருக்கும், நாமக்கலில் 159 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 158 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 77 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 19 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 69 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 19 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கோவை, தர்மபுரியில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், திருவாரூர், வேலூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூரில் தலா 2 பேரும், மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1,070 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை1,64,848 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கோவையில் 390 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும், சேலத்தில் 303 பேரும், தஞ்சாவூரில் 286 பேரும், வேலூரில் 163 பேரும், திருவள்ளூரில் 158 பேரும், நாமக்கலில் 154 பேரும், திருவாரூரில் 153 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்