June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

1 min read

Chance of rain in 7 districts of Tamil Nadu due to low pressure zone

11/10/2020

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருப்பதாவது:-

குறைந்த காற்றழுத்த மண்டலம்

அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டிருந்தது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும்.

மழை பெய்ய வாய்ப்பு

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14-ந் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *