மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” செல்போன் கதிர்வீச்சை குறைக்கும்
1 min read
A “chip” made of cow dung will reduce cell phone radiation
13/10/2020
மாட்டு சாணத்துக்கு கதிர்வீச்சை தடுப்பாற்றல் உண்டு என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட சிப் செல்போனில் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவரின் வல்லபாய் கதிரியா கூறினார்.
மாட்டு சாணம்
மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ராஷ்ட்டீரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் பசுக்களை பேணுதல், பாதுகாத்தல் ஆகும்.
இந்த காமதேனு ஆயோக் 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பண்டிகைகளின் போது மாட்டு சாணம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‛காம்தேனு தீபாவளி அபியான்’ என்னும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தை ஆயோக்கின் தலைவர் வல்லபாய் கதிரியா தொடங்கி வைத்தார். அவர்
மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கதிர்வீச்சு
மாட்டு சாணத்தால் பல்வேறு நன்மைகள் உண்டு. அது கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட கதிர்வீச்சு சிப்களை செல்போன்களில் பயன்படுத்தினால் கதிர்வீச்சு ஆபத்தினை குறைக்கும். நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். என்றார். “கவுசத்வா கவாச்” (Gausatva Kavach) என பெயரிடப்பட்ட இந்த ‘சிப்’, ராஜ்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜி கவுசலா என்பவரால் தயாரிக்கப்படுகிறது.