கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட்டு கேள்வி
1 min read
What is the action taken to protect the temple property? High Court question
13/10/2020
கோவில் சொத்துகளை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை ஆணையர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் சொத்துகள்
தூத்துக்குடியில் உள்ள கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் எனக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கூறியதாவது:-
உத்தரவு
கோவில் சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துகள் குறைந்து வருவதால், அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்துகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதா? அதற்கான வாடகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறநிலையத்துறை ஆணையாளர், வருவாய்த்துறை செயலதனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.