தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா; 4,929 பேர் டிஸ்சார்ஜ்
1 min readCorona for 3,914 people in Tamil Nadu today; 4,929 discharged
17/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் இன்று 4,929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 4,000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 3,914 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 192 ஆய்வகங்களில் 90,286 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,319 பேர் ஆண்கள். 1,595 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து15 ஆயிரத்து 121. பெண்களின் எண்ணிக்கை 2 லடசத்து 72 ஆயிரத்து 247 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,929 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று 56 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் 27 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 29 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு 10,642 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 39,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,036 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் 319 பேருக்கும், சேலத்தில் 188 பேருக்கும், செங்கல்பட்டில் 174 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், திருப்பூரில் 166 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 130 பேருக்கும், நாமக்கலில் 117 பேருக்கும், ஈரோடில் 111 பேருக்கும், கடலூரில் 99 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும், வேலூரில் 88 பேருக்கும், நீலகிரியில் 86 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்த்தில் 39 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 60 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 17 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், கோவை, சேலத்தில் தலா 5 பேரும், வேலூரில் 4 பேரும், திண்டுக்கல்லில் 3 பேரும், காஞ்சிபுரம், நாகையில் தலா 2 பேரும், திருப்பூர்,தி, திருவண்ணாமலை, தேனி, தஞ்சாவூர், ராமநாதபுரம்,புதுக்கோட்டை, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 365 பேரும், செங்கல்பட்டில் 285 பேரும், சேலத்தில் 268 பேரும், திருவள்ளூரில் 225 பேரும், நாமக்கல்லில் 185 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், திருவாரூரில் 152 பேரும், திருப்பூரில் 133 பேரும் பேரும், கடலுாரில் 147 பேரும், வேலுாரில் 110 பேரும், தஞ்சாவூரில் 131 பேரும், நீலகிரியில் 123 பேரும், ஈரோடில் 122 காஞ்சிபுரத்தில் 112 பேரும், நீலகிரியில் 105 பேரும், பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.