தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா
1 min readCorona for 3,536 people in Tamil Nadu today
19/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,536 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் தினமும் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 3, 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 4,515 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 49 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.