விஜய்க்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை; எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
1 min read
The visit has nothing to do with the party; SA Chandrasekhar Interpretation
5/11/2020
தான் தொடங்கிய அரசியல் கட்சிக்கும் தனது மகன் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திர சேகர்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது. இந்த கட்சியை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கி இருக்கிறார்.
அந்தக் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விளக்கம்
இந்த நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திர சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளேன்.” என்றார்.