June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஏவப்பட்டது

1 min read

PSLV with 10 satellites The C-49 rocket was launched

7/11/2020

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று பிற்பகல் ஏவப்பட்டது.

ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது.

பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது.

10 செயற்கை கோள்கள்

தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று(வெள்ளிக்கிழமை) மதியம் தொடங்கியது.

புறப்பட்டது

26 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் பிற்பகல் 3.02 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கவுண்ட்டவுன் நேரம் 5 நிமிடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட் புறப்படும் நேரம் 3.12 மணியாக மாற்றப்பட்டது. அதன்படி 3.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *